வக்கீல்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x

நெல்லை, சேரன்மாதேவியில் நேற்று வக்கீல்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை, சேரன்மாதேவியில் நேற்று வக்கீல்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மசோதாவிற்கு எதிர்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் (ஜே.ஏ.ஏ.சி.) அவசர பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில், மத்திய அரசு சார்பில் இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைக்க மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

அதன்படி நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் இணை செயலாளர் வக்கீல் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை மாற்றி அமைப்பதற்காக தாக்கல் செய்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் ழுழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் செந்தில்குமார், ராஜேஷ், சுதர்சன், மீரான், பழனி, பால்ராஜ், ஜெபசிங், சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் வேல்சாமி, மாதவன், அசோக் குமார், ஆறுமுக பூபதி மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story