வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x

மயிலாடுதுறையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர

மயிலாடுதுறை

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ஜெயராம் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறக்கோரியும் வக்கீல்கள் சங்கத்தினர் நேற்று மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டில், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறை வக்கீல் சங்கம் மற்றும் வக்கீல் நல சங்கத்தினர் மற்றும் வக்கீல்கள் நேற்று கோர்ட்டிற்கு செல்லவில்லை. இதன் காரணமாக நேற்று நடைபெற வேண்டிய வழக்கு விசாரணைகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.






Next Story