ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ெதாடங்கியது


ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ெதாடங்கியது
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா ெதாடங்கியது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) மற்றும் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும்.முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து ஜூன் 19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும்.


Related Tags :
Next Story