17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மாவுரெட்டி சின்ன‌ ஏரி


17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மாவுரெட்டி சின்ன‌ ஏரி
x

பரமத்தி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு மாவுரெட்டி சின்ன‌ ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் இருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு பரமத்திவேலூர் அருகே உள்ள இடும்பன் குளத்தை வந்தடைகிறது. இடும்பன் குளம் நிரம்பி வழிந்தோடி பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு காவிரியில் கலக்கிறது. இதே‌போல் மழைக்காலங்களில் திருமணிமுத்தாற்றில் அதிகப்படியான நீர் வரத்து உள்ள போது உபரிநீர் மற்றும் மழைநீர் பரமத்தி அருகே உள்ள மற்றொரு ஏரியான மாவுரெட்டி சின்ன ஏரியை வந்தடைகிறது. தற்போது பெய்த கனமழையால் மாவுரெட்டி சின்ன ஏரி நிரம்பி காணப்படுகிறது. இந்த ஏரியால் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு, மரவள்ளி மற்றும் தென்னை உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ள விவசாயிகள் பயன் அடைகின்றனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு மாவுரெட்டி ‌‌‌‌‌‌சின்ன‌ ஏரி நிரம்பியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story