2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைகட்டிய நம்ம ஊரு சந்தை
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைகட்டிய நம்ம ஊரு சந்தை
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த நம்ம ஊரு சந்தை நேற்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் இந்த சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள், சிறு தானியங்கள், மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகை பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக்கோழி முட்டைகள், பாரம்பரிய இனிப்பு கார வகைகள் மற்றும் ஊறுகாய் வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படடன. இதனால் நம்ம ஊரு சந்தை களை கட்டியது.
மேலும் மண்பாண்ட பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பொருட்கள், பனை ஓலை பொருட்கள்,உணவு, பழச்சாறு நீரா பானம் என ஏராளமான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர்.