50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கொங்கணாபுரம் புதுஏரி


50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கொங்கணாபுரம் புதுஏரி
x

50 ஆண்டுகளுக்கு பிறகு கொங்கணாபுரம் புது ஏரி நிரம்பியது. இதன் உபரிநீர் கால்வாய்களை தூர்வார உதவி கலெக்டர் சவுமியா உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

எடப்பாடி:

புதுஏரி

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் புது ஏரி அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போதிய நீர்வரத்து இல்லாமல் இந்த ஏரி வறண்டு கிடந்தது. சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுஏரி வழிந்து மறுகால் செல்லும் தகவல் அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் புதுஏரிக்கு வந்தனர். அவர்கள் மதகு பகுதியில் மலர் தூவினர்.

தூர்வார உத்தரவு

ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே தூர்வார வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உதவி கலெக்டர் சவுமியா உத்தரவிட்டார். தொடர்ந்து உடனே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. தூர்வாரும் பணிகளை பேரூராட்சி தலைவர் சுந்தரம், செயல் அலுவலர் மோசஸ் ஆண்டனி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

புது ஏரி நிரம்பியதால் அந்த பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Next Story