ஒரு மாதத்துக்கு பிறகு டவுன் பஸ்கள் இயக்கம்


ஒரு மாதத்துக்கு பிறகு டவுன் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-காந்தல் பென்னட் மார்க்கெட் இடையே ஒரு மாதத்துக்கு பிறகு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. முக்கிய சுற்றுலா தலமான படகு இல்லம் அப்பகுதியில் இருக்கிறது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் பென்னட் மார்க்கெட் வரை 5 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே காந்தல் பகுதியில் சாலை மோசமாக இருந்ததால், சாலையை சீரமைக்கும் பணி நகராட்சி மூலம் தொடங்கப்பட்டது. மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காந்தல் முக்கோணம் வரை டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. பென்னட் மார்க்கெட் வரை இயக்கப்படாததால் பயணிகள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். தற்போது பணிகள் நிறைவடைந்து, நேற்று முதல் ஊட்டி-காந்தல் பென்னட் மார்க்கெட் இடையே டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கு பின்னர் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story