பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையிலும் இறங்குகிறது ஆவின்..!
முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
ஆவினில் மலிவு விலை குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனையிலும் இறங்குவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 1 லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story