மீண்டும் மறு நில அளவீடு


மீண்டும் மறு நில அளவீடு
x

மீண்டும் மறு நில அளவீடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

மீன்சுருட்டி:

விக்ரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று 4 மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக மிகவும் குறுகலாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி-தஞ்சாவூர் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நான்கு வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தியது. இதையடுத்து திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, அதற்கான பணிகளை தொடங்க ரூ.1,200 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது. இதையடுத்து இச்சாலை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு - தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் 75 அடி மட்டுமே நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து, இழப்பீட்டு தொகையை பெற்றவர்கள் இடத்தினை காலி செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில், விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் செல்வக்குமார் மேற்பார்வையில், சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையர் ஆகியோர் மீன்சுருட்டி கடைவீதியில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மறு அளவீடு செய்து நில உரிமையாளர்களுக்கு காண்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story