வாரிசு அரசியலை மையப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பது மீண்டும் நிரூபணம்


வாரிசு அரசியலை மையப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பது மீண்டும் நிரூபணம்
x
தினத்தந்தி 12 May 2023 3:15 AM IST (Updated: 12 May 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

வாரிசு அரசியலை மையப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பது புதிய அமைச்சர் நியமனம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகிய உள்ளதாக கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

வாரிசு அரசியலை மையப்படுத்துவது தான் திராவிட மாடல் என்பது புதிய அமைச்சர் நியமனம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகிய உள்ளதாக கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

திறப்பு விழா

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் எந்திரம் திறப்புவிழா நடந்தது. அந்த எந்திரத் தை கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பயன்பாட்டுக்கு திறந்து வைத்து அதை பயன்படுத்துவதற்கான கார்டை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப் பட்டு இருக்கிறார். அரசியல் ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர் என்பதால் சக எம்.எல்.ஏ.வாக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 நாளுக்கு முன்பு நான் ஒரு கோரிக்கையை வைத்து இருந்தேன்.

வாரிசு அரசியல்

திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நீதி, சமநீதியாக இருக்க வேண்டும் என்பதால் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு துணை முதல்-அமைச்சர் பதவியோ அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை.

கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு இந்த பதவியை அவர் வழங்கி இருக்கிறார்.

இதை வைத்து பார்க்கும்போது, திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்துவது தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

இது ஜனநாயகத்துக்கு எதிரான விஷயம். இவர்கள் பேசுவது எல்லாம் குடும்ப அரசியல், வாரிசு அரசியலை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கவர்னரின் செயல்பாடு

பா.ஜனதாவில் கடைநிலை ஊழியர்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும் என உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறோம்.

கர்நாடக மாநில தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு எப்போதுமே பா.ஜனதாவுக்கு உண்டு.

கோவையில் கனிமவள கொள்ளை தினமும் நடந்து வருகிறது. தமிழகத்தில் நடந்து வரும் இந்த 2 ஆண்டு ஆட்சி சாதனை இல்லை, வேதனைதான். கவர்னரின் செயல்பாடு முழுக்க முழுக்க அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்ததுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story