முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக அவதூறு பாடல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்


முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக  அவதூறு பாடல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:  விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
x

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான அவதூறு பாடல் வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், "முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக 'கெட்டு' என்ற ஆல்பம் பாடல் கேரள மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் யூடியூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள மக்களிடம் வீண் வதந்தி மற்றும் பீதியை கிளப்பும் வகையிலும், இருமாநில மக்களிடையே நல்லுறவை கெடுக்கும் நோக்கத்திலும், கருத்துகளும், காட்சிகளும் உள்ளன. எனவே, இந்த ஆல்பம் பாடலை தடை செய்ய வேண்டும். இதனை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story