காட்டாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்


காட்டாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்
x

பேராவூரணி அருகே பூக்கொல்லை பூனைக்குத்தி காட்டாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணி அருகே பூக்கொல்லை பூனைக்குத்தி காட்டாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூனக்குத்தி காட்டாறு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகி புதுக்குளத்தில் இருந்து தொடங்கும் பூனைக்குத்தி காட்டாறு, சீவன் குறிச்சி, பழைய நகரம், மாவடுக்குறிச்சி, செல்வ விநாயக புரம், பூக்கொல்லை வழியாக ரெட்டை வயல் அம்புலி ஆற்றில் இணைந்து காட்டாறு கடலில் கலக்கிறது.இந்த காட்டாறு சுமார் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும், மழை மற்றும் வெள்ள அபாய நேரங்களில் பெரும் பகுதியான மழை நீர் இந்த காட்டாறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த காட்டாறு வருடத்திற்கு ஒருமுறை பெயரளவுக்கு தூர்வாரப்படுகிறது.

அகற்ற வலியுறுத்தல்

இதனால் ஒரு சில மாதங்களிலேயே ஆகாயத்தாமரை, கோரைபுற்கள் முளைத்தும் மற்றும் குப்பைகள், கோழி இறைச்சிகள், தென்னைமர கழிவுகள், கொட்டி காணப்படுகிறது.பேராவூரணியில் இருந்து பூக்கொல்லை செல்லும் வழியில் இந்த பூனைக்குத்தி காட்டாறு பாலம் உள்ளது. இந்த காட்டாற்றின் நீர் வேகத்தை ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்கள் தடுக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் காட்டாற்றில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் கோரை புற்களை அகற்றி, முறையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story