மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம்
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரிய 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு முகாம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் முன்னிலை வகித்தார். இதில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு முகாமில் பங்கேற்ற 18 வயதுக்குட்பட்ட 116 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.இதில் 37 மாற்றுத்திறனாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதற்காக மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமாக உதவித்தொகை பெறவும், 70 மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வயது தளர்வு குழு ஒப்புதலின்பேரில் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story