வயது தளர்வு மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான வயது தளர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர்
18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிலவகை ஊனத்தில் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைத்துவகை ஊனத்துக்கும் உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உதவித்தொகை வழங்குவதற்கான வயது தளர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆய்வுக்குழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் பார்த்தசாரதி, டாக்டர் பிரசன்னா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொள்ள 57 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 44 குழந்தைகள் கலந்து கொண்டனர். அவர்களை ஆய்வு செய்து உதவித்தொகை வழங்க இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
Related Tags :
Next Story