கல்லூரிகளுக்கிடையேயான ஆக்கி போட்டி
கல்லூரிகளுக்கிடையேயான ஆக்கி போட்டி காரைக்குடி அழகப்பா கல்வியியல் கல்லூரியில் மைதானத்தில் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆக்கி போட்டி காரைக்குடி அழகப்பா கல்வியியல் கல்லூரியில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணி, உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி அணி, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி அணி, அழகப்பா பல்கலைக்கழக அணி உள்பட10 அணிகள் கலந்துகொண்டன. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் நாள் மாணவிகளுக்கான போட்டியும், 2-வது நாளான நேற்று மாணவர்களுக்கான போட்டியும் நடந்தது. மாணவிகளுக்கான போட்டியில் முதல் பரிசை அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணியும், 2-வது பரிசை அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணியும், 3-வது பரிசை உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி அணியும், 4-வது பரிசை ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி அணியும் பெற்றது.
மாணவர்களுக்கான போட்டியில் முதல் பரிசை காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணியும், 2-வது பரிசை ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், 3-வது பரிசை அழகப்பா அரசு கலைக்கல்லூரி அணியும், 4-வது பரிசை அழகப்பா பல்கலைக்கழக அணியும் பெற்றது. முன்னதாக போட்டியை அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தொடங்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.