ஆக்கி போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை


ஆக்கி போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:16:20+05:30)

ஆக்கி போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆக்கி போட்டி அழகப்பா அரசு கலைக்கல்லூரி சார்பில் அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் அணி 2-வது பரிசையும், மாணவர்கள் அணி 3-வது பரிசையும் பெற்றது. மேலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் கலைச்செல்வி, சந்தியா, ஜஸ்டி, வைஷ்ணவி, சாருலதா ஆகியோர் அழகப்பா பல்கலைக்கழக ஆக்கி அணிக்கு தேர்வு பெற்று சென்னையில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையே பெண்களுக்கான போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இதேபோல் கல்லூரி மாணவர்கள் கோபிநாத், ஜான் வெஸ்லி, தனுஷ் ராம், ஆகாஷ் ஆகியோரும் பல்கலைக்கழகம் சார்பில் அடுத்த மாதம் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.


Next Story