வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி -மதுரையில் தொடங்கியது


வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி -மதுரையில் தொடங்கியது
x

பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி மதுரையில் நேற்று தொடங்கியது.

மதுரை


பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி மதுரையில் நேற்று தொடங்கியது.

ஆக்கி போட்டி

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பாரம்பரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அகில இந்திய அளவில் 17 வட்டாரங்களுக்கிடையே கைப்பந்து, ஆக்கி, இறகுபந்து உள்ளிட்ட போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியானது, வட்டாரங்களுக்கிடையேயான ஆக்கி போட்டிகளை முதல் முறையாக மதுரையில் நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டியினை, பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா ரா, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் (விரிவாக்கம் 3) நீரஜ் குமார் பாண்டா, பாரத ஸ்டேட் வங்கியின் வட்டார தலைமை அலுவலர் அலோக் குமார் சதுர்வேதி, மதுரை மண்டல துணை பொது மேலாளர் ஆனந்த்.ஹா ஆகியோர் முன்னிலையில் வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

4 ஆட்டங்கள் நடைபெற்றன

12 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றானது ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இடம் பெறும் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதி போட்டி 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி 5-ந் தேதி நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 4 ஆட்டங்கள் நடைபெற்றன. நேற்று நடந்த தொடக்க விழாவில் உதவி பொது மேலாளர் (மனிதவளத்துறை) விஜய்குமார், பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் சங்க பொதுச்செயலாளர் பாலாஜி, பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கிருபாகரன், வட்டார ஊழியர் நலத்துறை செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story