விழுப்புரம் அருகே ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விழுப்புரம் அருகே  ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விழுப்புரம் அருகே ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே அகரம்சித்தாமூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 80 ஏக்கர் ஆகும். இதில் 65 பேர் இந்த ஏரியின் பெரும்பகுதியாக 43 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு, மணிலா, எள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பினால் மழைக்காலங்களில் ஏரியில் போதுமான அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டருக்கும் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அவர்கள், தாங்களாகவே அகற்றவில்லை. இந்நிலையில் செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் தேவி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

ஓரிரு நாட்களில் ஏரி ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.


Next Story