பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.1000 கோடி மோசடி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் யு.டி.எஸ். என்ற தனியார் நிதிநிறுவனம் உள்ளது. இதில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி கொடுப்பதாக அறிவித்தனர். அதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
அவர்களுக்கு ஒருசில மாதங்கள் மட்டும் வட்டி கொடுத்தனர். அதன்பிறகு கொடுக்கவில்லை. அந்த வகையில் முதலீட்டாளர்க ளிடம் இருந்து ரூ.1000 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட் டது. இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த ரமேஷ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். தற்போது அவர் கோவை சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் ரமேசுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கியவர்களையும் கைது செய்ய வேண்டும்,
மோசடி பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சேலத்தை சேர்ந்த சண்முகம் தலைமை தாங்கினார். சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை சந்தித்து மனு அளித்தனர்.