தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்


தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


தேங்காய் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவும், அனைத்து ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் வினியோகிக்க கோரியும், தென்னை, பனை விவசாயிகளை காப்பாற்ற கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் தெக்கலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எ.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி, தெக்கலூர் ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவர் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story