விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கொடிக்கம்பத்தை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:-

கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அருகே உள்ள மேலஒட்டக்குடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கொடிக்கம்பத்தினை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் குளிக்கரை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட அமைப்பாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணை அமைப்பாளர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story