திருவாரூரில், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவாரூர்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர், துப்புரவு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு குறைந்த ஊதியம் வழங்குதல், கூடுதல் வேலை வழங்குதல், பணி பாதுகாப்பற்ற நிலை மற்றும் மறுக்கப்படும் உரிமைகள் குறித்து விசாரித்து உடன் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் காந்தி, பொருளாளர் நேரு, பழ வியாபாரிகள் சங்க தலைவர் செல்வம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story