சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:30 AM IST (Updated: 4 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் 6-வது வார்டு அடிச்சேரி தெருவில் தார்ச்சாலை அமைப்பதற்காக சாலையை தோண்டி, ஜல்லிகள் பரப்பப்பட்டன. இந்த நிலையில் ஒரு மாதமாகியும் சாலை புதுப்பிக்கப்படாததால் கிராமமக்கள் நடந்து செல்லவோ வாகனங்களில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கிராம மக்கள் திடீரென அப்பகுதியில் சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராமமக்கள் சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் உடனடியாக சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் தொடர்பு கொண்டு சாலைப்பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சாலைப்பணிக்கான எந்திரங்கள் மற்றும் தளவாட பொருட்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

1 More update

Next Story