முழுநேர டாக்டர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


முழுநேர டாக்டர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2023 12:45 AM IST (Updated: 6 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

முழுநேர டாக்டர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் வட்டார தலைமை ஆஸ்பத்திரி, திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம், திட்டச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழுநேர டாக்டர்களை நியமிக்கவேண்டும். திருமருகல் ஒன்றிய பகுதியில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். உளுந்து பயறு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் தியாகராஜன் மற்றும் பலர்் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story