அக்னி வீரன் கோவிலில் திருடியவருக்கு தர்ம அடி


அக்னி வீரன் கோவிலில் திருடியவருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே அக்னி வீரன் கோவிலில் திருடியவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனைவாரி கிராமத்தில் அக்னிவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் கோவிலுக்கு ஓடி வந்தனர். அப்போது ஒருவர், கோவிலில் இருந்த இரும்பு சூலம், பித்தளை குடம் உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியே வந்தார்.

உடனே கிராம மக்கள், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், சித்தலிங்க மடம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த குப்பன் மகன் குமரேசன்(வயது 38) என்பதும், கோவிலில் திருடியதும் தெரியவந்தது. இது குறித்து ஆனைவாரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தார்.


Next Story