வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன் நிறைவு


வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
x

மதுரை சிக்கந்தர்சாவடியில் வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

மதுரை

மதுரை,

மதுரை சிக்கந்தர்சாவடியில் வேளாண் உணவு பொருட்கள் வர்த்தக பொருட்காட்சி இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

வேளாண் வர்த்தக பொருட்காட்சி

மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள வேளாண் உணவு வர்த்தக மையத்தில் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் அறக்கட்டளை மற்றும் வேளாண் உணவு வர்த்தக மையம் ஆகியவற்றின் சார்பில் "வைப்ரன்ட் தமிழ்நாடு" என்ற பெயரில் வேளாண் உணவுப்பொருட்கள் அனைத்துலக வர்த்தகப் பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு 150 அரங்குகள் அமைக்கப்பட்டு, வேளாண் உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை, பொதுமக்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் என ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி

இந்த பொருட்காட்சி அரங்கத்தில், விவசாயிகள், வணிகர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த உதவும் வகையில் அறிமுகம் மேடை (லான்ச்பேட்) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களை பார்வையிட்டார்.

இதில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

இந்த காலத்து மக்கள் ஆேராக்கியமான உணவுகளை தான் விரும்புகிறார்கள். அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.

தரமான உணவு எவ்வளவு விலை விற்றாலும் வாங்கி சாப்பிட மக்கள் தயாராக இருக்கிறார்கள். தொழில்துறையில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் வரவேற்க வேண்டிய விஷயம். தொழில் முனைவோர்களுக்கு இந்த அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.

தற்போதுள்ள இளம் தலைமுறையினரும் வேளாண் தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 10 வருடங்களில் வேளாண் தொழிலில் அதிகமான நபர்கள் வந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மிராக்கல் ட்ரீ குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் சரவணகுமரன், பொருட்காட்சி படைப்பாற்றல் தலைவர் ரத்தினவேல், பொருட்காட்சி தலைவர் திருப்பதி ராஜன், துணைத்தலைவர்கள் முத்து, சுரேஷ் குமார், அறிமுக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருட்காட்சி இன்று நிறைவு

பொருட்காட்சியானது, இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த பொருட்காட்சியில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதுடன், ஏற்றுமதியாளராகவும் மாறலாம் என பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


Related Tags :
Next Story