வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
திவான்சாபுதூர்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆனைமலை பகுதியில் உள்ள திவான் சாபுதூர், தென்சித்தூர், சோமந்துறை, பில்சிண்னம்பாளையம், ரமணாமுதலிபுதூர், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தர் மற்றும் அனைத்து அரசு துைற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் வேளாண் அதிகாரிகள் பேசும்போது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வான கிராமங்களுக்கு தலா 600 வீதம் நெட்டை ரக தென்னை மரங்கள் வழங்கப்படுகிறது. மேலும் மண்வெட்டி, கடப்பாரை, இரும்பு சட்டி, 5 அரிவாள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் ரூ.1500-க்கு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் 15 தார்பாய்கள் 50 சதவீத மானியத்தில் ரூ.1,000-க்கு வழங்கப்பட உள்ளன என்றனர். பின்னர் அனைத்து துறைகளிலும் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.