வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்


வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
x

கந்திலி ஒன்றியத்தில் வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் பரதேசிபட்டி கிராமத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடை பெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மகேந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ஜே.சி.ராகினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இணை இயக்குனர் பாலா, ஒன்றிய குழு துணைத்தலைவர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், உயிர் உரங்கள், தோட்டக்கலை துறை சார்பில் விதைகள், மரக்கன்றுகள் வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜீவிதா வேளாண்மை துறை இளநிலை பொறியாளர் மகேந்திரவர்மன், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை துறை சார்பில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கந்திலி ஒன்றியத்தில் 8 கிராமங்களில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் 7 கிராமங்களில் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.


Next Story