வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம்


வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம்
x

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை, இ.எல். ரெட்டியபட்டி, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயபாண்டியன் வரவேற்றார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தாயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், பிச்சைராஜா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தாமோதர கண்ணன், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை வணிகர் கழகம், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 200 பேருக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கைத்தெளிப்பான் உள்ள வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டன.


1 More update

Next Story