ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் ரூ.85 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் ரூ.85 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெதரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் ரூ.85 லட்சத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெதரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
ராணிப்பேட்டை மாவட்டத்தில், விவசாயத்தினை ஊக்குவிக்க கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமங்களிலும் ஒரு விவசாய குடும்பத்திற்கு 2 தென்னங்கன்று வீதம் 300 விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 24 ஆயிரத்து 600 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்று வீதம் 49 ஆயிரத்து 200 தென்னங்கன்றுகள் ரூ.29 லட்சத்து 52 ஆயிரம் மானியத்திலும், 356 விவசாயிகள் தங்கள் வயலில் பணியாற்ற பயன்படுத்தும் வகையில் கடப்பாரை, தாளா, மண்வெட்டி, களைக்கொத்தி, 2 அரிவாள் ஆகிய பண்ணைக்கருவிகள் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் அரசு மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் 358 பயனாளிகளுக்கு ரூ.830 மானியத்தில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் தார்பாலின், 5 ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு ரூ.150 லிட்டர் வீதம் ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மானியத்திலும் உயிரி உரம் (திரவம்) வழங்கப்பட்டுள்ளது.மேலும் 1,425 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் விசை தெளிப்பான்கள் ரூ.2 ஆயிரம் மானியம் வீதம் ரூ.39 லட்சத்து 68 ஆயிரம் மானியத்திலும், ஒரு ஏக்கருக்கு ரூ.250 அரசு மானியத்தில் ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.85 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் 31 ஆயிரத்து 929 வேளாண் குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.