ரெயில் நிலையத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது-கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்


ரெயில் நிலையத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது-கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x

ரெயில் நிலையத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது-கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உள்பட்ட பெரிய ஆலங்குளத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாக்கியலட்சுமி, ஊராட்சி செயலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜாங்கம், முத்துச்சாமி, திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலக உதவியாளர் தீபாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் சந்திரன், மாங்கனி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருப்பரங்குன்றம் வழியே தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைய உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதில் பெரியஆலங்குளம் தொட்டியபட்டி பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்காக ரெயில்வே துறையின் மூலம் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது

விவசாயிகளை பாதிக்கும் விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது. இது குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து விவசாயிகளை பாதிக்காத வகையில் ரெயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story