ஆழ்வார்குறிச்சி பகுதியில் நெல் வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு


ஆழ்வார்குறிச்சி பகுதியில் நெல் வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தென்காசி

கடையம்:

கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமையில் துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆழ்வார்குறிச்சி-2 (செங்கானூர் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை) சாகுபடி செய்திருந்த ஐஆர்-50 நெற்பயிரில் புகையான் மற்றும் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக நெற்பயிர் ஆங்காங்கே காய்ந்து வைக்கோலாக மாறி வருகிறது. இதிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க பெப்ரோபுசின்-300 மில்லி அல்லது தையோமெத்தாக்ஹைம் 100 கிராம், டிரைசைக்குளோஜோல்-120 கிராம்/ ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் கலந்து மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் நிலத்தில் தண்ணீர் வடிய வைத்து வடிகால் வசதி செய்ய வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சண்முகநாதன், மாரிமுத்து உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story