50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு


50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM GMT (Updated: 31 Oct 2022 6:46 PM GMT)

50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு அதிகாரி தகவல்

விழுப்புரம்

50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு

அதிகாரி தகவல்

விழுப்புரம், நவ.1-

தமிழ்நாடு அரசு, நடப்பாண்டில் அறிவித்துள்ள 50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்திற்கு 1,589 எண்ணிக்கை இலக்கீடு பெறப்பட்டுள்ளது. சாதாரண முன்னுரிமை அடிப்படையில் 31.3.2013 வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்துள்ளவர்கள் மற்றும் சுயநிதி திட்டத்தின் கீழ் 31.3.2018 வரை ரூ.500 செலுத்தி விவசாய விண்ணப்பம் பதிவு செய்துள்ளவர்கள் விவசாய மின் இணைப்பு பெற சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரால் வழங்கப்படும் அறிவிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு தங்களது தயார் நிலையை 31.3.2022 வரை பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.


Next Story