வேளாண் பொருட்கள் ரூ.1 கோடியே 23½ லட்சத்துக்கு ஏலம்


வேளாண் பொருட்கள் ரூ.1 கோடியே 23½ லட்சத்துக்கு ஏலம்
x

அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.1 கோடியே 23½ லட்சத்துக்கு ஏலம் போனது.

கரூர்

விற்பனை கூடம்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தேங்காய்- தேங்காய் பருப்பு

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.45 குவிண்டால் எடை கொண்ட 11,997 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.27.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.71-க்கும், சராசரியாக .26.29-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 508-க்கு விற்பனையானது.

இதேபோல் 256.33½ குவிண்டால் எடை கொண்ட 515 மூட்டைகளில் தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.82.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ..79.69-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.79.66-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.69-க்கும், சராசரியாக ரூ.77.77-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 15 ஆயிரத்து 536-க்கு விற்பனையானது.

எள்

இதேபோல் 713.05 குவிண்டால் எடை கொண்ட 953 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.152.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.136.99-க்கும், சராசரியாக ரூ.150.99-க்கும், சிவப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.152.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.136.99-க்கும், சராசரியாக ரூ.150.99-க்கும், வெள்ளை எள் கிலோ அதிகபட்சமாக ரூ.164.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.162.99-க்கும், சராசரயாக ரூ.160.99-க்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 902-க்கு விற்பனையானது.

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவை ரூ.1 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 946-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Next Story