கோவில்பட்டி பகுதியில் நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்காத நிலுவை கூலியை வட்டியுடன் வழங்க வலியுறுத்தி நேற்று யூனியன் அ்லுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி பகுதியில் நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்காத நிலுவை கூலியை வட்டியுடன் வழங்க வலியுறுத்தி நேற்று யூனியன் அ்லுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி பகுதியில் நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்காத நிலுவை கூலியை வட்டியுடன் வழங்க வலியுறுத்தி நேற்று யூனியன் அ்லுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாய தொழிலாளர்கள்

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு முற்றுகையிட்டனர். பின்னர், மத்திய அரசு நிதியை குறைத்து பொதுமக்களுக்கு வேலையையும், கூலியையும் குறைத்தும், தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை சீரழிக்கும் மத்திய அரசை கண்டித்து, லட்சுமி தலைமையில், மாரியம்மாள், சித்தாண்டி, முருகம்மாள் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோரிக்கைகள்

கோவில்பட்டி பகுதி கிராமங்களில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்காத கூலியை வட்டி சேர்த்து வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைவருக்கும் 100 நாட்கள் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்.

ஆதார் லிங்க், பி.ஐ.பி. லிஸ்ட் போன்ற குறைகளை கூறி வேலைக்கு வரும் நாட்களை குறைப்பதை தவிர்க்க வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை கூலி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், சி.ஐ.டி.யு. மாநில குழு கிருஷ்ணவேணி, மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story