விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் உலகநாதன், துணை செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், 600 ரூபாய் தினக்கூலியும் வழங்க வேண்டும், 55 வயதை கடந்த அனைத்து முதியோருக்கும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி ரூ.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பன உள்பட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் அழகுநாதன், ராமமூர்த்தி, ஏழுமலை, ராஜா, செல்வராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story