விழுப்புரத்தில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமையான வாழ்க்கை நெருக்கடியால் துயரத்தில் தள்ளப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டக்கூலியை கேரள அரசைப்போல் ரூ.600-ஆக தமிழக அரசு அறிவிக்கக்கோரியும், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அபிமன்னன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கலியமூர்த்தி, செல்வராஜ், சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர்கள் உலகநாதன், சவுரியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story