விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்மனை பேரூராட்சியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
குலசேகரம்,
பொன்மனை பேரூராட்சியில் நகரப் புற வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பொன்மனை கிளை தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலவிளை பாசி, மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், வட்டார செயலாளர் ஸ்ரீகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் விஸ்வம்பரன், பொன்மனை கூட்டுறவு சங்கத் தலைவர் வல்சகுமார் மற்றும் நிர்வாகிகள் மாதவன்குட்டி, சிவகுமார், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் நகரப் புற வேலைத் திட்டத்தை தொடங்கி விவசாயிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
Related Tags :
Next Story