விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு
தென்காசியில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
தென்காசி
தென்காசியில் தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் பெரியசாமி கொடி ஏற்றினார். மாவட்ட பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் செய்யது அலி முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கணேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முத்துசாமி வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து 200 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் இசக்கி துரை, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் சம்சுதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story