விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் 100 நாள் வேலைக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஸ்டேட் வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா தலைவர் சண்முகையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் அங்குதன், பொருளாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன், மாவட்ட குழு வீரசெம்பன், ஜான்சிராணி, மாற்றுத்திறனாளி சங்க தாலுகா தலைவர் முனியசாமி, தாலுகா குழு உறுப்பினர் முனியசாமி, தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ஹேமலதா, பொருளாளர் கணபதி, துணைத்தலைவர் தர்மலிங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story