விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்டத்தலைவர் முருகையன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித்திட்டத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி, ஊரக வேலைத்திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு-கீழ்வேளூர்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் வேணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர்.

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் நாகை மாலி எம்.எல்.ஏ, விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மீரா, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனா்.

கீழையூர்

இதேபோல கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் பேசினார். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், கிளை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் இளைய பெருமாள் தலைமை தாங்கினார்.


Next Story