விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆனைமலை அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோயம்புத்தூர்
ஆனைமலை
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி அலுவலகதிற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சாந்தி தலைமை தாங்கினார். இதில் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சியில் நகரப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 2021-2022 ல் பதிவு செய்த சிலருக்கு வேலை அட்டை வழங்கியுள்ளனர்.
ஒரு சில மாதங்கள் மட்டும் வேலை வழங்கிவிட்டு பின்னர் வேலை வழங்கவில்லை. 2023-ல் வேலைவாய்ப்பை உறுதி செய்து அனைத்து பதிவான அட்டைதாரர்களுக்கும் உடனடி வேலை தர வேண்டும். மேலும் புதிதாக வேலை அட்டை கேட்பவர்களுக்கு வேலை அட்டை தந்து வேலை வாய்ப்பு தர வேண்டும் என்றும், பாகுபாடு இன்றி அனைவருக்கும் வேலை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story