கோபியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்
கோபியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்
கோபி
கோபி வட்டார பகுதியில் கீழ்பவானி பாசன நீர் திட்டத்தின் கீழ் சுமார் 800 எக்டேர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான விதை நெல் கிடைக்கும் பொருட்டு ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான குழுவினர் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரத்தில் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் சம்பா நெல் சாகுபடி ஏற்ற ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கூகலூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் வேளாண்மை அலுவலர் சந்திரசேகர், கோபி வேளாண் அறிவியல் நிலையம் மண்ணியல்துறை விஞ்ஞானி பிரேமலதா ஆகியோர் பேசினார்கள்.
இப்பயிற்சியில் பெரும்பாலான கோபி வட்டார விதை விற்பனையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சி முகாமை கோபி விதை ஆய்வாளர் சுமையா ஒருங்கிணைத்து நடத்தினார்.