விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தினார்.


விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தினார்.
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:45 PM GMT)

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை வட்டாரத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் மண்வளத்தை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்யலாம். கோடையில் பெய்யும் மழைநீரை பூமிக்குள் சேகரித்து வைக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. கோடை உழவு செய்வதால் மேல்மர் கிழாகவும், கீழ்மர் மேலாகவும் புரட்டி விடப்பட்டு மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. முந்தைய பயிரின் தூர்கள் மற்றும் களைகள் மட்கி மண்ணின் கரிம வளம் அதிகரிக்கப்படுகிறது. பயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கூட்டுப்புழு மற்றும் சிகப்பு கம்பளிப்புழுக்கள் அழிக்கப்படுகிறது. மேலும் மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகுக்கிறது. இந்த தகவலை தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகஜெயந்தி தெரிவித்தார்.


Next Story