வேளாண்துறை அலுவலக இளநிலை உதவியாளர் தற்கொலை


வேளாண்துறை அலுவலக இளநிலை உதவியாளர் தற்கொலை
x

ராஜாக்கமங்கலம் அருகே வேளாண்துறை அலுவலக இளநிலை உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே வேளாண்துறை அலுவலக இளநிலை உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

இளநிலை உதவியாளர்

ராஜாக்கமங்கலம் அருகே எறும்புக்காடு பக்தன்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் லிங்கராஜன் (வயது 35). இவர் குமரி முன்சிறை அரசு வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் லிங்கராஜன் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லிங்கராஜன் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story