கோவை கொடிசியாவில் வேளாண் கண்காட்சி தொடக்கம்
கோவை கொடிசியாவில் வேளாண் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி திறந்துவைத்தார்.
கோவை கொடிசியாவில் வேளாண் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி திறந்துவைத்தார்.
வேளாண் கண்காட்சி
வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பத்தை நேரடியாக அறிமுகப்படுத்தும் வகையில் கோவை கொடிசியாவில் 21-வது அக்ரி இன்டெக்-2023 என்ற வேளாண் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை தாங்கி கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் கொடிசியா தலைவர் திருஞானம், செயலாளர் சசிகுமார், கண்காட்சி தலைவர் தினேஷ்குமார், துணை தலைவர் ஸ்ரீஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
500 அரங்குகள்
இந்த கண்காட்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை நடை பெறுகிறது. 3.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்களின் அரங்குகள் அமைத்து உள்ளன. கண்காட்சி யை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை காணலாம்.
கண்காட்சியில் கொரியா, இஸ்ரேல், ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் மராட்டியம், குஜராத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதற்கிடையே கண்காட்சியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று தொடங்கிய கண் காட்சிக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அங்கு உள்ள அரங்குகளை பார்வையிட்டனர்.
கண்காட்சியில் சொட்டுநீர் பாசனத்தை செல்போன் மூலம் இயக்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பயிருக்கு தேவையான உரத்தை தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு கலந்து விடும் வதி உள்து. அதை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.
கைத்தெளிப்பான்களால் பூச்சிக்கொல்லியை தெளிக்கும்போது அந்த மருந்து பூச்சிகளை மட்டுமின்றி விவசாயிகளுக்கம் பாதிப் பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் அதிநவீன டிரோன் பெர்டிலை ஸர் என்ற டிரோன் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன.
காலநிலையை கண்டுபிடிக்கும் கருவி
காலநிலையை கண்டுபிடித்து கூற வெதர் ஸ்டேஷன் என்ற கருவி உள்ளது. அதை வயல்களில் வைத்தால் மழை, வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும்.
நெல் அறுக்கும் எந்திரம், அறுவடைக்கு பிறகு வைக்கோலை எடுக்கும் கருவி உள்ளது. கிராமத்தில் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைத்து காய்கறிகளை சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் நகரத்தில் உள்ளவர்கள் தங்களது வீட்டு மாடியில் தோட்டம் வளர்க்கலாம். அது குறித்து விளக்கும் அரங்கமும் இடம் பெற்று உள்ளது.
களை எடுக்கும் ரோபோ
கண்காட்சியில், தானியங்கி முறையில் களை எடுக்க மாயா போட்ஸ் என்று பெயரில் ரோபோ எந்திரம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ரோபோ எந்திரம் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். மூலம் இயங்கக்கூடியது. இந்த ரோபோவை உழுதல், களையெடுத்தல், டிரில்லிங், ஸ்பிரேயிங் போன்ற வேளாண் பணிகளில் ஈடுபடுத்தலாம். 100 கிலோ அளவில் வேளாண் அறுவடை பொருட்களையும் எடுத்து செல்லலாம்.
இந்தியாவில் இந்த ரோபோ எந்திரத்தை செல்போன் மூலம் இயக்கலாம். இதுபோன்று தானியங்கி உரமிடும் கருவியும் உள்ளது. அத்துடன் தானியங்கி பழம் பறிக்கும் ரோபோ எந்திரம் வ உள்ளது. இது ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை மரத்தில் இருந்து பறித்து பெட்டியில் அடுக்கிவைக்கிறது. 230 வோல்டேஜ் மின்சாரம் கொண்டது. இதை அங்கு வந்த விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஒரு ஆட்டின் விலை ரூ.6 லட்சம்
கண்காட்சியில் கால்நடைகள் பிரிவில் தென்ஆப்ரிக்கா நாட்டின் போயர் வகையை சேர்ந்த மெகாவாட் என்ற பிரமாண்ட ஆடு உள்ளது. 6 வயதான இந்த ஆட்டின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில், சிறுதானிய பயிர்கள், காய்கறிகள், சூரியகாந்தி செடி, பயறு வகைகள். நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. அதோடு குண்டு மல்லிகைபூ, சம்பங்கி உள்ளிட்ட பூ ரங்களும் பயிரிடப்பட்டு உள்ளன. இதுதவிர தேனீ வளர்ப்பு, மீன், ஆடு, கோழி வளர்ப்பு பண்ணையும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சி அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.