ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது


ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2023 2:15 AM IST (Updated: 15 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட்டைச் சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் (வயது 47). கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த சுதாகர் (65), அவரது நண்பர் புதுகோட்டையை சேர்ந்த ராஜா (50) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.


அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் சார்ஜர் செய்யும் கம்பெனியில் ரூ.16 லட்சம் முதலீடு செய்தால் மாத வருமானமாக ரூ.60 ஆயிரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

அதை நம்பி அவர் ரூ.16 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை தரவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் ஆனந்த் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.

ஆனாலும் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து செந்தில் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர், ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



Next Story