மழையால் சாய்ந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு


மழையால் சாய்ந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை பணிகளை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. இந்த மழையால் அறுவடைக்கு முன்பு 15 ஆயிரம் எக்டேரில் விதைக்கப்பட்ட உளுந்து பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகிறது. வில்லியநல்லூர் கிராமத்தில் நேற்று மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சேகர் தலைமையில் வேளாண்துறை அதிகாரிகள் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளதாகவும், தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் பாதிக்கப்படும் என்றும், மழை நின்றால்தான் முழுமையான பாதிப்பு தெரியவரும். பாதிப்பு குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் தெரிவித்தார்.


Next Story