வேளாண்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆதியாக்குறிச்சியில் வேளாண்மை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
ஆதியாக்குறிச்சியில் வேளாண்மைத்துறை உழவர்நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆதியாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன், சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் முத்துகுமார் திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை அலுவலர் ஆனந்த் விவசாயிகளுக்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான மானியம் குறித்தும் பேசினர். அம்மன் அக்னி குஞ்சுகள் கலைக்குழு, விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் மண் மாதிரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஒயிலாட்டம், நடனம், நாடகம், பாடல், கரகாட்டம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் மகாலட்சுமி, உதவி விதை அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ருக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் வெள்ளத்துரை, சபிதாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.