ஆ... தள்ளு... தள்ளு... தள்ளு...
ஆ... தள்ளு... தள்ளு... தள்ளு...
ஈரோடு
உயிர் காக்கும் டாக்டர்களின் பணி எத்தகைய உன்னதமானதோ, அதேபோல் உயிருக்கு போராடுபவர்களை குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணியும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற அவசரகால வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு ஆம்புலன்ஸ் பழுதானது. அந்த ஆம்புலன்சை 'ஸ்டார்ட்' செய்வதற்காக அங்கிருந்தவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே சிறிது தூரம் தள்ளி சென்றனர். இந்த சம்பவத்ைத பார்க்கும்போது நடிகர் வடிவேலுவின் ஒரு படத்தில் இடம் பெற்ற "ஆ... தள்ளு... தள்ளு... தள்ளு..." என்ற நகைச்சுவை காட்சி அங்கிருந்தவர்களின் கண்முன்னே வந்து சென்றது.
Related Tags :
Next Story